நெல்லை- காவல்துறை சார்பில் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

நெல்லை- காவல்துறை சார்பில் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
X

மருந்தக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

அம்பாசமுத்திரம் மாவட்ட காவல்துறை சார்பில் மருந்தக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்படி மருத்துவ கடை உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் பேசும் போது மருத்துவரின் சரியான அறிவுரை இல்லாமல் மருந்து வாங்க வருபவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டாம். சானிட்டைசர் 50மில்லி அல்லது 100மில்லி பாட்டில்கள் மட்டுமே கொடுக்க வேண்டும். காய்ச்சல், சளி மாத்திரைகளை மருத்துவரின் சீட்டு கொண்டு வருபவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

பொதுமக்கள் கொண்டு வரும் மருந்து சீட்டின் மருந்துகளை தங்கள் கடையில் போதுமான இருப்பு வைத்து கொண்டு தகுந்த நபர்களுக்கு வழங்க வேண்டும்.சானிட்டைசர் மற்றும் மருத்துவ மாத்திரைகளை சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil