ஆதரவற்ற முதியவருக்கு சேவை செய்த ஆசிரியர்

ஆதரவற்ற முதியவருக்கு சேவை செய்த ஆசிரியர்
X
நெல்லை மாவட்டம்கல்லிடைக்குறிச்சியில் ஆதரவற்ற முதியவருக்கு சேவை செய்த ஒய்வு பெற்ற ஆசிரியர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பல மாதங்களாக அழுக்கு ஆடை அணிந்து தாடி மற்றும் சடைமுடியுடன் அப்பகுதியில் பிச்சை எடுத்தபடி முதியவர் ஒருவர் வலம் வந்தார்.

வடநாட்டைச் சேர்ந்த அந்த முதியவருக்கு முடி திருத்தம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்தார் சமூக ஆர்வலருமான வில்சன். அத்தோடு அவருக்கு உணவளித்து, தனியார் முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்ந்துள்ளார். ஓய்வு பெற்ற ஆசிரியரான வில்சனின் இந்த சமூக சேவையை பொதுமக்கள் பலரும் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்