அம்பை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடைேய ஏற்பட்ட தகராறில் மாணவன் உயிரிழப்பு

அம்பை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடைேய ஏற்பட்ட தகராறில் மாணவன் உயிரிழப்பு
X

பைல் படம்.

அம்பாசமுத்திரம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அரசு பள்ளியில் கடந்த 25 ம் தேதி இரு பிரிவாக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

அம்பை அருகேயுள்ள பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பள்ளாக்கால் பொதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி, இடைக்கால் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 25 -ந் தேதி இந்த பள்ளியில் 12 -ம் வகுப்பு படிக்கும் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாணவர், அதே பள்ளியில் 11 -ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் கையில் கயிறு கட்டி இருப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே பெல்டால் தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு மாணவருக்கு காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அந்த 12-ம் வகுப்பு மாணவன் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பாப்பாக்குடி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்