இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சொரிமுத்து அய்யனார் கோயிலில் படையலிட அனுமதி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆற்றில் குளிக்கவும், பொங்கல் படையல் செய்யவும் திருக்கோயில் நிர்வாகம் நாளை முதல் அனுமதி வழங்கியுள்ளது.
முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார்.
இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருப்பதும் விசேஷமான அம்சம். குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.
சன்னதி காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். இங்கு மகாலிங்கம், சொரிமுத்தைய்யனார், சங்கிலி பூதத்தார், பிரம்மரட்சஸி, தளவாய்மாடன், தூசிமாடன், பட்டவராயர், அகத்தியர், பேச்சியம்மன், சுடலைமாடன், இருளப்பன், இருளம்மன், கரடிமாடசாமி, மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். பக்தர்கள் பிரார்த்தனைக்காக இம்மரத்தில் கட்டும் மணிகளை, மரம் விழுங்கிவிடுவதைப் போல, உள்ளேயே பதிந்து விடுகின்றன.
இதனை, மணி விழுங்கி மரம் என்கின்றனர். பொதிகை மலை மீதுள்ள இந்தக் கோயிலில், ஆடி அமாவாசை விழா பிரசித்தம். இங்கே சாஸ்தா சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில், பூர்ண, புஷ்கலா தேவியருடன் அருள் செய்கிறார். சபரிமலை செல்பவர்கள் சாஸ்தாவின் முதல் கோயிலான இங்கு வந்து மாலை அணிவிக்கின்றனர்.
கொரேனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த பங்குனி உத்திரம் அன்று பக்தர்கள் கோவிலில் வேண்டுவதற்கு மற்றும் அனுமதி அளித்தது. பொங்கலிட அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆற்றில் குளிக்கவும், பொங்கல் படையல் செய்யவும் திருக்கோயில் நிர்வாகம் நாளை முதல் அனுமதி வழங்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu