அம்பை தொகுதியில் 17 பள்ளிகளில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள்

அம்பை தொகுதியில் 17 பள்ளிகளில் ரூ.40 லட்சம் மதிப்பில்  ஸ்மார்ட் வகுப்பறைகள்
X

ஸ்மார்ட் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா.

அம்பாசமுத்திரம் தொகுதியில் 17 பள்ளிகளில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகளை எம்எல்ஏ இசக்கி சுப்பையா திறந்து வைத்தார்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் 2021-2022 ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 17 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கினார்.

முதற்கட்டமாக கோபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கூனியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வீரவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையை ரிப்பன் வெட்டி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story