கூலிப்படைக்கு அரிவாள் சப்ளை: பத்தமடை பட்டறை உரிமையாளர் கைது

கூலிப்படைக்கு அரிவாள் சப்ளை: பத்தமடை பட்டறை உரிமையாளர் கைது
X

கைது செய்யப்பட்ட சுடலை.

பத்தமடை பகுதியில் கூலிப்படைக்கு அரிவாள் விநியோகம் செய்த பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கொலைக் குற்றங்களை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பவ்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள அரிவாள் பட்டறைகளை மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து பட்டறை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் சுடலை(55) என்பவர் அரிவாள் பட்டறையில் கூலிபடையினருக்கு அரிவாள்கள் தயார் செய்யப்பட்டு சப்ளை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் பத்தமடை பகுதியில் உள்ள சுடலை ஆசாரி என்பவரது பட்டறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கூலி படையினருக்கு விநியோகம் செய்யப்பட இருந்த 5 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி பட்டறை உரிமையாளர் சுடலையை பத்தமடை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
future of ai act