அம்பாசமுத்திரம் தொகுதியில் சரத்குமார் தீவிர பிரசாரம்

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் செங்குளம் கணேசனை ஆதரித்து சரத்குமார் தீவிர பிரசாரம் செய்தார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள சிவந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் திறந்த வேனில் நின்று கொண்டு அக்கட்சியின் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செங்குளம் கணேசனை ஆதரித்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பரப்புரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய சரத்குமார், வேளை வாய்ப்பில் பெண்களுக்கு ஐம்பது சதவீதம் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம், இலவச மடிக்கணினி வழங்குவதோடு இனையதளம் இலவசமாக வழங்குவோம், எங்களது கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறிய அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றுவோம், என்று தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.

முன்னதாக நடிகர் சரத்குமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து ஆளுவுயர மாலை அணிவித்து செண்டை மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதில் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மைய நிர்வாகிகள், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!