குழந்தை மற்றும் வயிற்றிலுள்ள கருவையும் விற்பனை; தாய் உள்ளிட்ட இருவர் கைது
பைல் படம்.
திருப்பூர் மாவட்டம், குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த தேவி(24). இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால், குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாக நெல்லை மாவட்டம், முக்கூடல் மயிலபுரத்தைச் சேர்ந்த வியாகம்மாள் மேரியிடம் முறையிட்டுள்ளார்.
அவர், தேவியின் 2 வயது குழந்தையான தர்ஷனாவை விற்பனை செய்துவிடலாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மயிலபுரத்தை சேர்ந்த ஜான் எட்வர்ட் மற்றும் அற்புதம் ஆகியோரிடமிருந்து ரூ.30 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்ட தேவி, வியாகம்மாளிடம் குழந்தையை கொடுத்துள்ளார்.
மேலும் தேவியின் வயிற்றில் வளரும் ஆறுமாத கருவையும், மயிலப்புரத்தைச் சேர்ந்த அமலா பாத்திமா மற்றும் செபஸ்டின் ஆகியோருக்கு விற்க மார்கரெட் தீபா(29) ஒப்பந்தம் செய்திருப்பதாக திருநெல்வேலி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்க்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கடந்த 24ம் தேதி, முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுத்தமல்லி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அனிதா (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டு சட்டத்திற்கு விரோதமாக குழந்தையை விற்ற தேவி மற்றும் மார்க்ரெட் தீபா இருவரையும் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu