இலவச மண் எடுக்க அனுமதி காேரி மண்பாண்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

இலவச மண் எடுக்க அனுமதி காேரி மண்பாண்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
X

காருகுறிச்சி மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்க அனுமதி கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காருகுறிச்சி மண்பானை செய்யும் தொழிலாளர்கள் தொழிலுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி திடீர் சாலை மறியல்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகிலுள்ள கூனியூர் மற்றும் காருகுறிச்சி பகுதிகளில் மண்பாண்ட உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மண்பாண்ட உற்பத்தி நடைபெறுவதற்கு இலவச மண் எடுக்க அனுமதி கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஏற்கனவே மண் எடுப்பது குறித்து சேரன்மாதேவி சார் ஆட்சியர் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மண்பாண்ட உற்பத்தியாளர்கள், காருகுறிச்சி மண்பாண்ட தொழிலாளர் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கம் முன்பு மண்பாண்ட தொழிற்சங்கம் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சேரன்மகாதேவி போலீசார் மறியலில் ஈடுபட்ட சுமார் 50 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story
ai solutions for small business