பி.எஸ்.என் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா - கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

பிஎஸ்என் கல்லூரி கிறிஸ்துமஸ் விழாவில், மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் திடியூர் உள்ள பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுரியில், கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் டயோசீசன் கவுன்சில் உறுப்பினர் கிங்ஸ்லி கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் உரை நிகழ்த்தினார்.
இவ்விழாவில் கல்லூரி மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி தலைவர் ருக்மணி சுயம்பு, நிர்வாக இயக்குனர் முனைவர் செல்வகுமார், முதல்வர் முனைவர். மணிகண்டன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் வர்கிஸ் மற்றும் முனைவர் பால் ஜோஷ்வா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu