அடிப்படை வசதிகளை சீரமைக்க நகராட்சி தலைவரிடம் அரசியல் கட்சி கோரிக்கை

அடிப்படை வசதிகளை சீரமைக்க நகராட்சி தலைவரிடம் அரசியல் கட்சி  கோரிக்கை
X

 வி கே புரம் நகராட்சி தலைவரை  எஸ்டிபிஐ கட்சியினர் சந்தித்து அடிப்படை வசதிகளை சீரமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்

எஸ்டிபிஐ கட்சியினர் வி கே புரம் நகராட்சி தலைவரை சந்தித்து அடிப்படை வசதிகளை சீரமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்

நெல்லை புறநகர் மாவட்டம்,அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகர எஸ்டிபிஐ ('SDPI ) கட்சி சார்பில், நகராட்சித்தலைவர் செல்வசுரேஷ்பெருமாளை சந்தித்து, நகராட்சிக்குட்பட்ட 7 ஆவது வார்டு கருத்தையாபுரம், சங்கரபாண்டியபுரம், ஆகிய பகுதிகளில் தொடர் பிரச்னையாக உள்ள கழிவுநீர் ஓடை பிரச்னை மற்றும் பன்றித் தொல்லை, 15 ஆவது வார்டு புதுமனை கீழத்தெருவில் தொடர்ந்து நிலவி வரும் குடிதண்ணீர் பிரச்னை மற்றும் கழிவுநீர் ஓடை பிரச்சனை, 14 ஆவது வார்டு சிவந்தியப்பர் கோயில் பின்புறம் உள்ள (கிராமத்தெரு) தெற்கு மாடவீதி பகுதியில் கழிவுநீர் ஓடை தொடர் பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசி, கொசு மற்றும் விஷப்பூச்சிக்கள் தொல்லை ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து, சீரமைத்து புதிய ஓடைகள் அமைத்துத்தர கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 7 ஆவது வார்டு கவுன்சிலர் இசக்கி உடனிருந்தார். விக்கிரமசிங்கபுரம் எஸ்டிபிஐ கட்சியின் நகர துணைத் தலைவர் பீர்ஷா, நகர செயலாளர் ஷானவாஸ், நகர செயற்குழு உறுப்பினர் முகம்மது ரஃபி, எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர்கள், சபீர், ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!