உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்
X

தமிழக முதல்வரின் நிவாரண நிதி உயிரிழந்த காவலர் பாண்டியராஜன் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சாமுவேல் பாண்டியராஜன் கடந்த 09.03.2020-ல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். பணியில் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதால் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இதனை இன்று திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை சாமுவேல் பாண்டியராஜன் மனைவி தங்க மலர்மதியிடம் வழங்கினார்.

Updated On: 22 April 2021 11:30 AM GMT

Related News