கிராம உதயம் சார்பில் 1000 மரக்கன்றுகள் நடுவதற்காக வழங்கினர்

நெல்லை அருகே கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம் சார்பில் 1000 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்திரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கிராம உதயம் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு 1000 மரக்கன்றுகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கிராம உதயம் நிர்வாக இயக்குநர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் மற்றும் கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் தனி அலுவலர் கணேசன் வரவேற்புரை வழங்கினர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் சேகர், ஆறுமுகத்தாய், சுசிலா மற்றும் தன்னார்வ தொண்டர் புவனேஸ்வரி ஆகியோர் மரக்கன்றுகள் நடும் அவசியம் குறித்து கருத்துரை வழங்கினர். இறுதியாக சுமிதா நன்றியுரை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu