அவதூறாக பேசி கல்லால் தாக்கி, மிரட்டல் விடுத்த நபர் கைது

அவதூறாக பேசி கல்லால் தாக்கி, மிரட்டல் விடுத்த நபர் கைது
X

பைல் படம்.

கல்லிடைக்குறிச்சி பகுதியில் அவதூறாக பேசி கல்லால் தாக்கி, மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமது மைதீன்(19), அவரது நண்பர்களுடன் நேற்று முன்தினம் ஆற்றிற்கு குளிக்கச் சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மூக்கையா என்கிற நாகராஜன்(24) வழிமறித்து உங்களது பெயர் என்ன என கேட்டுள்ளார். முகம்மது மைதீன் மற்றும் அவரது நண்பர்கள் பெயரை கூறவும், மூக்கையா அவர்களை அவதூறாகப் பேசி, கீழே கிடந்த செங்கலால் தலையில் அடித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து முகமது மைதீனின் தந்தை சேக் பீர்முகம்மது(54), கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் முருகேஷ் விசாரணை மேற்கொண்டு செங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூக்கையா என்கிற நாகராஜனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!