மகசூல் அதிகரிக்க அற்புத யோசனை தரும் வேளாண் அதிகாரி!

மகசூல் அதிகரிக்க அற்புத யோசனை தரும் வேளாண் அதிகாரி!
X
மகசூல் அதிகரிக்க அம்பாசமுத்திரம் வேளாண் அதிகாரி அற்புதமான யோசனை!

விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும் என்றால் அதற்கு என்னென்ன செய்யலாம் என அவர்களுக்கு யோசனை கூறும் வகையில் அம்பாசமுத்திர வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆற்று வண்டல் தேற்றும் பயிரை என்பது தமிழ் முதுமொழி. ஆற்று வண்டல் மண்ணை வயலில் போட்டால் மண்ணின் வளம் காக்கப்பட்டு பயிரின் மகசூல் அதிகரிக்கும் என்பது இதன் பொருள்.

வண்டல் மண்ணை வயலில் இடுவதால் வயல் மண்ணின் வேதியியல் தன்மை மாறுகின்றது. இதனால் வண்டல் மண்ணில் தண்ணீர் தேங்கும் திறன் அதிகமாகிறது. அதிக தண்ணீரைத் தக்க வைப்பதால் அமில காரத் தன்மையும் மேம்படுத்தப்பட்டு ஈரப்பதமும் அதிகரிக்கிறது. கரிம அளவு மற்றும் நுண்ணுயிர்களின் பெருக்கமும் அதிகரிக்கின்றன. மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கந்தக சத்து என அதிகரிக்கின்றன. இதனால் மண்ணின் ஆரோக்யம் மேம்படுகின்றன. பயிரின் மகசூல் அதிகரிக்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பொதுப்பணித்துறை குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு கண்டறியப்பட்ட குளங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

கோடாரங்குளத்தில் இடைமலைக்குளம், மேல அம்பாசமுத்திரத்தில் மேல இடையன்குளம், கீழ இடையன்குளம், ரெங்கை யன் குளம், பல்லாங்குளம், ஏகாம்பர புரத்தில் பெட்டை குளம், உசிலம் குண்டு குளம், திருநாண் குளம், அடைய கருங்குளம் கல்சூந்துகுளம், குமார தீர்த்துகுளம், வாகை குளம் கிராமத்தில் சிறுங்க ன்குளம், வாகைக்குளம், மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்த சுமை தாங்கி குளம், சீர்மாதங்குளம், வைராவிகுளம் கிராமத்தில் வைராவிகுளம், கீழ்முகத்தில் குறிப்பான்குளம், அயன்சி ங்கம்பட்டி கிராமத்தில் சிங்கம்பட்டி தெற்குகுளம், சிங்கம்பட்டி வடக்குகுளம், தெற்கு பாப்பான்குளத்தை சார்ந்த கரடிகுளம், உப்பு கரைகுளம், ஆலடிகுளம், அய்யப்ப சேரிகுளம், ஆத்தியா ன்குளம்.

இந்த குளங்களிலுள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுக்க அனுமதி அளித்துள்ளது மாவட்ட நிர்வாகம். அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களுக்குத் தேவையான வண்டல்மண் எடுக்க தங்கள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு மனு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!