பெரியார் பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பெரியார் பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
X

சேரன்மகாதேவி பஸ்நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர்.

சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே பெரியாரின் படத்திற்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் சேரன்மகாதேவி பஸ்நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி என்ற பிரபு, ராஜகோபால், நகரச் செயலாளர் மனிஷா செல்வராஜ், முன்னாள் நகர செயலாளர் அபுபக்கர், அன்வர் உசேன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அண்ணாதுரை மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!