நெல்லை-கார் விபத்தில் மரணமடைந்த சிறப்பு காவல் படை ஆய்வாளர் இறுதி சடங்கு-30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை
நெல்லை-கார் விபத்தில் சிறப்பு காவல் படை ஆய்வாளர் இறுதி சடங்கு 30 குண்டுகள் முழுங்க இறுதி மரியாதை
நெல்லை மாவட்டம் அயன்சிங்கம்பட்டியை சேர்ந்த சிறப்புக் காவல்படை ஆய்வாளர் உளுந்தூர்பேட்டை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கார் விபத்தில் உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை அடுத்த அயன் சிங்கம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது55). இவர் சென்னை ஆவடி 2 வது பட்டாலியனில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தயார் உடல் நிலை சரியில்லாமல் காலமாகி விட்டதால் இறுதி சடங்குகள் செய்ய தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அனைத்து காரியங்களும் முடிந்து பணியில் சேர்வதற்காக நேற்று முன்தினம் சென்னைக்கு அவர் தனது காரில் தனியாக சென்றுள்ளார். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை சொந்த ஊரான அயன் சிங்கம்பட்டிக்கு கொண்டு வந்து இன்று இறுதி சடங்குகள் நடைபெற்றது, இறுதி சடங்கில் அரசு மரியாதையுடன் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை தளவாய் கார்த்திக்கேயன், துணை தளவாய் ரவிச்சந்திரன், ஆய்வாளர்கள் கண்ணன், அழகுதுரை, துணை ஆய்வாளர்கள் ஜெரோம் துரைராஜ், உலகம்மாள், மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய துணை ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு 30 குண்டுகள் முழுங்க இறுதி மரியாதை செய்தனர்,
பலியான ராமகிருஷ்ணன் குடும்பத்தில் சில மாதங்களுக்கு முன்பு அவரது மகன் ராஜா (வயது30) நெஞ்சு வலியால் இறந்துவிட்டார், அதிலிருந்து சில தினங்களில் இவரது தந்தை சண்முகவேலு உடல் நிலை சரியில்லாமல் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாயார் இறந்து விட்டதால் இறுதி சடங்கில் கலந்து கொண்டு பணிக்கு திரும்பிய அவரும் விபத்துக்குள்ளாகி இறந்து விட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை இழந்த அவரது குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu