விக்கிரமசிங்கபுரம் பகுதியில் புதிதாக மின் மாற்றி-மின் விநியோகம் சரி செய்த ஊழியர்கள்

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் புதிதாக மின் மாற்றி-மின் விநியோகம் சரி செய்த ஊழியர்கள்
X

விக்கிரமசிங்கபுரம் மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நான்கு லட்சம் செலவில் புதிதாக ஒரு மின் மாற்றி அமைத்து மின்விநியோகம் சரிசெய்யப்பட்டது. மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விக்கிரமசிங்கபுரம் நகர்புறம் ரூபாய் நான்கு லட்சம் செலவில் புதிதாக ஒரு மின் மாற்றி அமைத்து மின்விநியோகம் சரிசெய்யப்பட்டது. மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் நாடு மின்சார வாரியம் கல்லிடைக்குறிச்சி கோட்டம் விக்கிரமசிங்கபுரம் உபகோட்டம் விக்கிரமசிங்கபுரம் நகர்புறம் 2 பிரிவிற்குட்பட்ட அனவன்குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே இருந்த மின்மாற்றியின் கூடுதல் மின்பளுவை குறைப்பதற்காகவும் குறைந்த மின்னழுத்த குறைபாட்டை சரிசெய்வதற்காகவும் ரூபாய் நான்கு லட்சம் செலவில் புதிதாக ஒரு மின் மாற்றி அமைத்து மின்விநியோகம் சரிசெய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள், விக்கிரமசிங்கபுரம் உதவி செயற்பொறியாளர் ராமகிளி உதவி பொறியாளர்கள் மகேந்திரன் விஜயராஜ் மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!