கல்லிடைக்குறிச்சி அந்தோணியார் ஆலயத்தில் புதிய கெபி: மறைமாவட்ட ஆயர் திறந்து வைப்பு

கல்லிடைக்குறிச்சி அந்தோணியார் ஆலயத்தில் புதிய கெபி: மறைமாவட்ட ஆயர் திறந்து வைப்பு
X

கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் புதிய கெபியை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி திறந்து வைத்தார்.

கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் புதிய கெபியை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி திறந்து வைத்தார்.

கல்லிடைக்குறிச்சி அந்தோணியார் ஆலயத்தில் புதிய கெபியை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் திறந்து வைத்தார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் 40 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட புதிய கெபி திறப்பு விழா நடைபெற்றது. புதிய கெபியை பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் கல்லிடைக்குறிச்சி தூய அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை பாக்கிய செல்வன், அம்பாசமுத்திரம் பங்குத்தந்தை அம்புரோஸ், விக்கிரமசிங்கபுரம் பங்குத்தந்தை சைமன் செல்வன், ஆசிரியர் ஜான் மோரிஸ், மரிய செல்வம் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். விழா முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai products for business