நெல்லை: மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டுக்கு சுற்றுலா வாகனம் தொடக்கம்
மாஞ்சோலை எஸ்டேட் சுற்றுலா வாகனத்தை வனப்பாதுகாவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திலுள்ள மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். ஒரு நாளைக்கு 5 நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று முதல் இப்பகுதி சுற்றுலாப் பயணிகள் பயன்படும் வகையில் வனத்துறை சார்பாக வாகன சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடக்கவிழா மணிமுத்தாறு வனச் சோதனைச்சாவடியில் நடைபெற்றது. வாகன சேவையை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநரான செந்தில்குமார் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வார நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையும், வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில் காலை 8 முதல் பகல் 12, பகல் 1 முதல் மாலை 5 மணி வரையும் இந்த வாகனம் இயக்கப்படுகிறது.
மேலும் இந்த வாகனம் மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் இருந்து மாஞ்சோலைப் பகுதியிலுள்ள சுற்றுலாத் தளங்களுக்கு மட்டும் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர். தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் துணை இயக்குநர் செண்பகப்ரியா, துணை வனப்பாதுகாவலர் ராதை, வனச்சரகர்கள், வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu