நெல்லை:பழமையான சிவாலயத்தில் மாட்டுச் சாணத்தில் இயற்கை முறையில் விபூதி தயாரிப்பு
பழமையான சிவாலயத்தில் வளர்க்கப்படும் மாடுகளின் சாணத்தில் இருந்து இயற்கை முறையில் விபூதி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் இடைக்காலுக்கு அடுத்து பாப்பாங்குளம் என்ற ஊரில் 2000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சிவாலயம் ஒன்று உள்ளது.
இந்த சிவாலயத்தில் கோவில் பகுதியில் 30 பசுமாடுகள் வளர்க்கப்படுகிறது. அந்த பசு மாட்டின் சாணத்தை எடுத்து இயற்கை முறையில் விபூதி தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள், இந்த பணியை சிவ தொண்டாக நினைத்து மேற்கொள்கின்றனர். பசுவின் மாட்டுச் சாணத்தை எடுத்து வெயிலில் நான்கு நாட்கள் நன்றாக காயவைத்து, அதை தீயிட்டு எரிய வைத்து, பின்னர் அந்த பொடியை, ரைஸ்மில்லில் மீண்டும் நன்றாக பொடியாக்கி விபூதியாக மாற்றம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். வெளியாட்கள் விலைக்கும் வாங்கிக் கொள்ளலாம். அதில் வரும் பணத்தில் பசுமாட்டிற்கு தீவனங்கள் வாங்குகின்றனர். மேலும், பசுமாட்டின் ஹோமியம் மூலம் ஓமவாட்டர் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்து ஜவ்வாது போன்ற வாசனை பொருளையும் இயற்கை முறையில் தயாரிக்கவுள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu