/* */

நெல்லை : ஒன்றிய திமுக கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்

HIGHLIGHTS

நெல்லை :  ஒன்றிய திமுக  கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை
X

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் மாவட்டச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட சேரன்மகாதேவியில் திமுக சார்பில் சேரன்மகாதேவி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி என்ற பிரபு, ராஜகோபால் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் சபாநாயகரும், மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பேசியதாவது: வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற வேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதில், சேரன்மகாதேவி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள், கிளை செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 July 2021 4:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’