வீரவநல்லூரில் பள்ளி குழந்தைகளுக்கான மேலாண்மை குழு பயிற்சி

வீரவநல்லூரில் பள்ளி குழந்தைகளுக்கான மேலாண்மை குழு பயிற்சி
X

வீரவநல்லூரில் உள்ள பாரதியார் அரசு மேல் நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு பயிற்சி நடைபெற்றது.

மேலாண்மை குழு பயிற்சியில் குழந்தைகள் உரிமை, குழந்தைகளின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு பயிற்சி நடைபெற்றது.

சேரன்மாதேவி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியர் மதியழகி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். சேரன்மாதேவி வட்டார கல்வி அலுவலர் உமாசங்கர், வீரவநல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வசந்த சந்திரா மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.

பயிற்சியின் முக்கியத்துவமான குழந்தைகள் உரிமை, குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, பள்ளி மேலாண்மை குழு, பள்ளி மேம்பாட்டுத் திட்டம் போன்ற தலைப்பில் கருத்தாளர்களாக சேரன்மாதேவி பெரியார் மேல்நிலைப் பள்ளி முதுகலை தாவரவியல் ஆசிரியர் கணேசன் மற்றும் சேரன்மாதேவி வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் நம்பிராசன் ஆகியோர் செயல்பட்டனர்.

இப்பயிற்சியில் பாடகபுரம், உலுப்படிப்பாறை, மாதுடையார்குளம், பொட்டல், கல்லிடைக்குறிச்சி, காட்டுமன்னார்கோயில், நெசவாளர் காலனி, மூலச்சி வீரவநல்லூர், புதூர் போன்ற பகுதிகளில் உள்ள தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர் சுந்திரமகாலிங்கம் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!