பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண நிதி

பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண நிதி
X

பணியில் இருந்த போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியை திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை காவல் நிலையத்தில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக சுப்பிரமணியன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 14.03.2020 ல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து விட்டார். பணியில் இருக்கும் போதே இறந்து விட்டதால் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதனை இன்று திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையை சுப்ரமணியனின் மனைவி வசந்தகோமதியிடம் வழங்கினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!