அம்பாசமுத்திரத்தில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்கான வழிகாட்டு நிகழ்ச்சி

அம்பாசமுத்திரத்தில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்கான வழிகாட்டு நிகழ்ச்சி
X

அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கான வழி காட்டும் நிகழ்ச்சி.

அம்பாசமுத்திரத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்கான வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான வழி காட்டும் நிகழ்ச்சி. நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நெல்லை ஜவான்ஸ் சார்ந்த முன்னாள், இன்னாள் இராணுவ வீரர்கள் அம்பாசமுத்திரம், வி.கே.புரம் மற்றும் வள்ளியூர் பகுதிகளில் உள்ள அனைத்து இளைஞர்களும் பயன்பெறும் விதமாக இலவச பயிற்சி அளித்து வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக அம்பாசமுத்திரம் தாலுகா பிரம்மதேசம் ஊராட்சி மன்ற தலைவர்.சி.ராம் சங்கர் கேட்டு ஏற்பாட்டில் ராணுவத்தில் உள்ள பிரிவுகள் என்னென்ன, அதற்கு என்ன தகுதிகள்? அனைவரும் எவ்வாறு எளிதில் சேர்வது எப்படி என்பதற்கான வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ராணுவ வழிகாட்டு நிகழ்ச்சியில் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நெல்லை ஜவான்ஸ் சார்ந்த 15 முன்னாள், இன்னாள் ராணுவ வீரர்கள் தங்களது அனுபவங்களையும் மற்றும் ராணுவத்தில் சேருவதற்கான வழிமுறைகளையும் வழங்கினார்கள்.

Tags

Next Story
ai marketing future