கிரைன் மூலம் வேட்பாளருக்கு ராட்சத மாலை போட்டு வரவேற்பு

கிரைன் மூலம் வேட்பாளருக்கு ராட்சத மாலை போட்டு வரவேற்பு
X
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளரை வரவேற்க கிரைன் மூலம் ராட்சத மாலை அணிவித்த தொண்டர்கள்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் புடைசூழ சேரன்மகாதேவி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

பின்னர் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதிக்தயாளிடம் இசக்கி சுப்பையா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த இசக்கி சுப்பையா அதிமுக கட்சித் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கூடி நின்று வரவேற்றனர். அப்போது சிலர் ராட்சத மாலை ஒன்றை கிரைன் உதவியுடன் கொண்டு வந்து வேட்பாளரை உற்சாகப்படுத்தினர். ஆனால் அதிக எடை கொண்ட மாலை என்பதால் அதை அணியாமல் வேட்பாளர் இசக்கி சுப்பையா தனது கையால் அந்த மாலையை தொட்டார். பிறகு மாலை மீண்டும் கிரைன் உதவியுடன் கீழே இறக்கப்பட்டது. வழக்கமாக அதிக எடை கொண்ட பெரிய மாலைகளை தொண்டர்கள் வேட்பாளர்களுக்கு போடுவது வழக்கம். ஆனால் வித்தியாசமாக மிகப்பெரிய எடை கொண்ட ராட்சச ரோஜாப்பூ மாலையை கிரைன் உதவியுடன் அதிமுக தொண்டர்கள் கொண்டு வந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!