மாஞ்சோலைக்கு உறவினர்களை பார்க்க சென்றவர்களை இறக்கிவிட்ட வனத்துறை

மாஞ்சோலைக்கு உறவினர்களை பார்க்க சென்றவர்களை இறக்கிவிட்ட வனத்துறை
X

மாஞ்சோலைக்கு சென்ற பயணிகளை இறக்கி விட்ட வனத்துறை.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காணச் சென்ற உறவினர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட வனசோதனை காவலர்கள்

மாஞ்சோலை வனப் பகுதிகளுக்குள் சுற்றுலா செல்வதற்காக தான் பயணிகள் செல்கின்றனர் என்றும் சுற்றுலா செல்லும் பயணிகள் தங்களுடைய வனச் சோதனை காவலர்கள் வண்டியில் தான் சுற்றுலா செல்ல வேண்டும் என்று பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்ட வனச் சோதனை காவலர்கள்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது மாஞ்சோலை வனப்பகுதி. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் காரணத்தால் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். மேலும் மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வனச்சரகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்தில் தான் செல்ல வேண்டும். இதற்கு ஒருவருக்கு 350 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாக வனச்சரகம் சார்பாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் உள்ள தங்களது உறவினர்களை காணச் சென்ற பயணிகளை வனச்சரக காவலர்கள் மணிமுத்தாறு வனச் சோதனை சாவடியில் இறக்கிவிட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்திற்கு பின் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி பயணிகளை மீண்டும் அரசு பேருந்தில் ஏற்றி உறவினர்களை பார்க்க அனுப்பி வைத்தார். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு