மரங்களை வெட்டியவர்கள் மீது அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை

கோப்பு படம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உட்பட்ட கிராம பகுதியில் தனியார் விளைநிலங்களில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து 20.03.2022 ம் தேதி இரவு கடையம் வனச்சரக தனி குழுவினருடன் இரவணசமுத்திரம் கடையம் சாலையில் வாகனம் ஒன்று பரிசோதனை செய்யப்பட்டது .அந்த வாகனத்தில் கருவேல மரம் உட்பட பல ஜாதி மரங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் மரம் வெட்டியவர்களை சோதனை மூலம் கண்டறிந்தனர்.வாகன சோதனையும் மேற்கொண்டனர். அதன் மூலம் 8000, 5000 ,15000,என வெவ்வேறு இடங்களில் மூன்று நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவிந்தபேரி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் உரிய அனுமதி இன்றி வெட்டப்பட்டிருந்த தேக்கு மர வெட்டு மோட்டுகளை உதவி வனப்பாதுகாவலர், கோவிந்தபேரி பீட் வனக்காப்பாளர் மற்றும் தனிக்குழுவினர் ஸ்தல தணிக்கை செய்து கண்டறிந்து அனுமதியில்லாமல் தேக்கு மரங்களை வெட்டிய வகைக்கு வழக்கு பதிவு செய்து ரூ 25 ஆயிரம் துணை இயக்குனர் உத்தரவின்படி அபராதம் விதிக்கப்பட்டது.
புலிகள் காப்பக எல்கை மற்றும் சூழல் உணர் மண்டல பகுதிக்கு வனத்துறை அனுமதியின்றி பச்சை மரங்கள் வெட்டுவது சட்டப்படி குற்றமாகும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu