வீரவநல்லூர் மனநல காப்பகத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உணவு வழங்கல்

வீரவநல்லூர் மனநல காப்பக பெண்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.
வீரவநல்லூர் மனநல காப்பக பெண்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் புனித டிம்பினா மனநல காப்பகத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் பிறந்தநாள் முன்னிட்டு காப்பகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
நெல்லை மேற்கு மாவட்டம் மற்றும் முக்கூடல் தாய் வீடு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.முத்து தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி முத்துமாரி, பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. முத்து, ஒன்றிய தலைவர் ஏ.எம்.மாரியப்பன், வீரவநல்லூர் நகர செயலாளர் அஜித்குமார், மற்றும் பகவதி, மணிகண்டன், நகுல், மாரியப்பன், சுபாஷ், மனோ, சந்தோஷ், மாலையப்பன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அருட்சகோதரிகள் மெர்சி அகஸ்டி, மரியடோம்னிக், செளமியா ஜோஸ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu