உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உரிமம் பெறுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உரிமம் பெறுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
X

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது, உரிமம் பெறுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல், உரிமம் பெறுதல் குறித்து வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் சார்பில், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல், மேலாண்மை மற்றும் உரிமம் பெறுதல் குறித்து வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள், ஆர்வலர் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களை சார்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். சேரன்மகாதேவி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ் குமார் விவசாயிகளை வரவேற்று பேசினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கற்பகராஜ் குமார் தலைமையேற்று கூட்டுப்பண்ணையம், நுண்ணீர் பாசனம் திட்டம் குறித்து பேசினார்.

எம்.டி.எஸ். இலக்ய நிலா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல் குறித்தும், வேளாண்மை அலுவலர் ஆனந்த்குமார் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை திட்டங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினை மேலாண்மை செய்வது குறித்தும், தாமிரா இயற்கை உற்பத்தியாளர் நிறுவன அலுவலர் மாரிமுத்து உரிமம் பெறுதல் குறித்தும் தொழில்நுட்ப பயிற்சி அளித்தனர். ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை வேளாண்மை தொழில்நுட்ப ஆலோசகர் வினோத் உடனிருந்தார். உதவி வேளாண்மை அலுவலர் ஜானகிராமன் நன்றி கூறினார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு