/* */

காணொலி காட்சி வாயிலாக விவசாயி மனு; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

வாகைகுளத்தில் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ள பயிர்களை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து குளத்திற்கு தண்ணீர் கிடைக்க உடனடி நடவடிக்கை.

HIGHLIGHTS

காணொலி காட்சி வாயிலாக விவசாயி மனு; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனு தொடர்பாக அம்பாசமுத்திரம் அருகே வாகைகுளம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார்.

காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனு தொடர்பாக அம்பாசமுத்திரம் அருகே வாகைகுளம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் அணையில் இருந்து வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் வழியாக தண்ணீர் பெரும் கடைமடை பாசன குளமான வாகை குளத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளது.

இதனை காணொலி காட்சி வாயிலாக விவசாயிகளிடமிருந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சம்பந்தப்பட்ட குளத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் மூலம் பாசனம் பெறும் ஆயக்கட்டு பகுதி விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அந்த குளத்திற்கு தண்ணீர் கிடைக்க உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இக்குளத்தின் மூலம் பாசனம் பெறும் ஆயக்கட்டு பரப்பில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை சம்பந்தப்பட்ட வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை மூலம் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும் நடப்பு கார் பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்

இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டி, செயற்பொறியாளர் அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அசோக் குமார் உட்பட வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்,

Updated On: 25 Aug 2021 2:37 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு