கல்லிடைக்குறிச்சி போலி எம்சாண்ட் ஆலை வழக்கு : முக்கியகுற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏன்?
நெல்லை:
அம்பாசமுத்திரம் அருகே கல்லிடை குறிச்சியில் எம்சாண்ட் தயாரிக்க அனுமதிபெற்று மணல் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யபடாதது ஏன் என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
நெல்லைமாவட்டம்,கல்லிடை குறிச்சியில் எம்சாண்ட் தயாரிக்க அனுமதி பெற்று வண்டல் ஒடை ஆற்றில் மணல் திருடிய விவகாரத்தில், சேரன்மகாதேவி அப்போதைய சப் கலெக்டர் பிரதீக் தயாள் 9.57கோடி ரூபாய் அபராதம் விதித்தார். 10க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் . கோடிக்கணக்காண ரூபாய் மதிப்புள்ள மணல் திருடப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிவசங்கரன் என்பவர் தொடுத்த பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டியதால் காவல்துறையில் புகார் செய்து வருவாய்துறையினர் நடவடிக்கை மேற் கொண்டனர்.மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தொடர்ந்து தலை மறைவாகவே உள்ளனர். மணல் கடத்தல் கும்பலின் உதவியால் மாவட்ட எஸ்பி குடியிருக்கும் வீடு,கம்பவுண்டு சுவர் உட்பட பல இலட்ச ரூபாய் செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட்டதாகவும் அப்போது சர்ச்சை எழுந்தது.
புகார் கொடுக்கப்பட்டு (3/8/2020) வழக்குபதிவு செய்து ஒரு ஆண்டை நெருங்கி வரும் சூழலில் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. விசாரணையை வேகப்படுத்தி முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இதில் பல உயர் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் தொடர்பு உள்ளது. அதனால் தான் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு கோடிக்கணக்கான மதிப்பில் கனிமவளங்களை திருடியவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu