அம்பாசமுத்திரம் : காணி மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் :  காணி மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
X
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காணி மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மயிலாறு, காணிக்குடியிருப்பு பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு மணிமுத்தாறு 12வது பட்டாலியன் அணி மற்றும் தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், பட்டாலியன் அணி தளவாய் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இதில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இம்முகாமில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு மலைவாழ் மக்களுக்கு கண்பரிசோதனை செய்தனர். இதில் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆயிர்வாளர் ஜெரோம் துரைராஜ், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai future project