பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
X
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் உயர்கல்வி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்கம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் உயர்கல்வி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராக நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் உதவி இயக்குனர் ஹரி பாஸ்கர் மற்றும் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் இளைஞர் இயக்குனர் வைரவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ- மாணவிகளுக்கு அரசு வேலைக்கு தயாராவது எப்படி, தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியை இசக்கி ராஜ் தொகுத்து வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரம் தலைமை உரை ஆற்றினார். நிர்வாக அதிகாரி நடராஜன், நூலகர் முனைவர் பாலச்சந்திரன், உதவி நூலகர் சண்முகானந்த பாரதி, சந்தான சங்கர், காசிராஜன் ஆகியோர் உட்பட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டார்கள். முடிவில் நூலகர் முனைவர் பாலச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai marketing future