திமுக ஆவுடையப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக ஆவுடையப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஆவுடையப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஆவுடையப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாங்குழி, அத்தாலநல்லூர், திருப்புடைமருதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் முன்னாள் சபாநாயகரும் திமுக உறுப்பினருமான ஆவுடையப்பன் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொண்டார்.

அப்போது வேட்பாளருக்கு கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் பொன்னாடை போத்தி வரவேற்றனர். இதில் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரை, திமுக வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பண்ணை முருகன் உட்பட திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story