திமுக செயல்வீரர்கள் கூட்டம்: பேரூராட்சி தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனை

திமுக செயல்வீரர்கள் கூட்டம்: பேரூராட்சி தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனை
X

பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அம்பாசமுத்திரத்தில் திமுக செயல் வீரர் கூட்டம்.

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்தில் வைத்து திமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட திமுக மணிமுத்தாறு பேரூர் கழக செயல் வீரர் கூட்டம். பேரூராட்சி கழக செயலாளர் முத்து கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு மணிமுத்தாறு பேரூராட்சி பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் அம்பை ஒன்றிய பெருந்தலைவரும், அம்பை ஒன்றிய செயலாளருமான R.சிவன் பாண்டியன்(எ ) பரணி சேகர். ஆவின் ஆறுமுகம். டி.பி.கணேசன், திமுக பிரமுகர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட கவுன்சிலர், அருண் தவசு, மாஞ்சோலை மைக்கேல் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!