எஸ்டிபிஐ தன்னார்வலர்களின் கொரோனா பணி

எஸ்டிபிஐ தன்னார்வலர்களின் கொரோனா பணி
X

கொரோனா நோய் தொற்றால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேரன்மகாதேவியை சார்ந்த 66 வயது பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9மணி அளவில் உயிரிழந்தார்.

இறந்தவரின் உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சி புறநகர் மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் அவர்களை தொடர்பு கொண்டு நல்லடக்கம் செய்ய உதவி கோரினர், இதையடுத்து புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், அம்பை தொகுதி செயலாளர் டாடா சேக் தலைமையிலான தன்னார்வ மீட்புக்குழுவினர் உடலை பெற்று எஸ்டிபிஐ கட்சி ஆம்புலன்ஸ் மூலம் சேரன்மகாதேவி கல்லறை தோட்டம் கொண்டு சென்று உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறந்தவரின் மதப்பிரகாரம்‌ கல்லறை தோட்டத்தில் நள்ளிரவு நல்லடக்கம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!