வீரவநல்லூரில் கொரோனா நிவாரண நிதி ரூ 2000 வழங்கப்பட்டது

வீரவநல்லூரில்  கொரோனா நிவாரண நிதி  ரூ 2000 வழங்கப்பட்டது
X
வீரவநல்லூரில் கொரோனா நிவாரண நிதி முதற்கட்டமாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கி வரும் நியாய விலை கடைகளில் தமிழக அரசின் கொரானா நிவாரண நிதி முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் தி.மு.க நகரச் செயலாளர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். அவை தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொருளாளர் நவநீதன், மாவட்ட பிரதிநிதிகள் சுப்பையா, ஆனந்தராஜ், முத்துகிருஷ்ணன், சப்புக்குட்டி, குமரன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். வார்டு செயலாளர் முத்துக்குமார் நன்றியுரை கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!