அம்பை அருகே ரூ.15 லட்சம் ஏமாற்றியதாக பெண் வீட்டார் மீது புகார்: போலீசார் விசாரணை

அம்பை அருகே ரூ.15 லட்சம் ஏமாற்றியதாக பெண் வீட்டார் மீது புகார்: போலீசார் விசாரணை
X
அம்பை அருகே ரூ.15 லட்சம் ஏமாற்றியதாக பெண் வீட்டார் மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்

அம்பை அருகே ரூ.15 லட்சம் ஏமாற்றியதாக பெண் வீட்டார் மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தென்காசி மாவட்டம் வல்லம், பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (60). lஇவரது மகன் முத்துக்குமாருக்கு அம்பை அருகேயுள்ள கோட்டைவிளைபட்டி பகுதியை சேர்ந்த செல்வ அரசன் (54) என்பவரது மகள் பவித்ராவை திருமணம் செய்ய கடந்த 2020 -ம் ஆண்டு உறுதிசெய்துள்ளனர்.அம்பை அருகே ரூ.15 லட்சம் ஏமாற்றியதாக பெண் வீட்டார் மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் திருமண செலவிற்கு ரூ.15 லட்சம் தேவை என்றும், பணம் இல்லையென்றால் திருமணத்தை நிறுத்த வேண்டியது வரும் என்றும், ரூ.15 லட்சம் தந்தால் திருமணம் முடிந்தவுடன் திருப்பித் தந்துவிடுவதாகவும் செல்வஅரசன், முத்துசாமி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடு்த்து முத்துசாமி கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.10 லட்சம், ரூ. 5 லட்சம் என இரண்டு தவணையாக பணத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.ஆனால் திருமணம் முடிந்தும் செல்வஅரசன் பணத்தை திருப்பித் தரவில்லை. மேலும் பவித்ரா முத்துக்குமாருடன் வசிக்க முடியாது என்றும் கூறிவிட்டார்.

இது குறித்து போலீசில் 3 முறை புகாரளித்தும் புகாரை ஏற்காததால் முத்துசாமி, அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டதையடுத்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் மணப்பெண், மணப்பெண்ணின் தந்தை, தாயார், சகோதரர் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பவித்ரா என்கிற மணப்பெண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியை சேர்ந்த வாலிபருடன் நிச்சயம் செய்யப்பட்டு பின்னர் அந்த வாலிபரை ஏமாற்றி விலை உயர்ந்த ஐபோன் மற்றும் பணத்தை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும், மணப்பெண் பவித்ரா பீர் அடிக்கும் மற்றும் தம் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

Tags

Next Story
ai products for business