சேரன்மகாதேவி: கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டது

சேரன்மகாதேவி: கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டது
X
சேரன்மகாதேவி நியாய விலை கடைகளில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்பட்டது.

சேரன்மகாதேவி தொடக்க வேளாண்ம கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கி வரும் சேரன்மகாதேவி, பிள்ளைகுளம், திருவிருத்தான்புள்ளி, பத்தமடை (திருத்து) ஆகிய நியாய விலை கடைகளில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு சேரன்மகாதேவி கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், துணைத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சேரன்மகாதேவி நகர செயலாளர் வக்கீல் பழனிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் சேரன்மகாதேவி மாரிசெல்வம், பன்னீர்செல்வம், உச்சிமாகாளி, முன்னாள் நகர செயலாளர்கள் சௌந்தர்ராஜன், ஐசக் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் தமிழரசி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வகுமார், கூட்டுறவு வங்கி இயக்குநர் மகாராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்