அயன் சிங்கம்பட்டியில் கருமந்தி குரங்குகள் தொல்லை: பொதுமக்கள் அவதி

அயன் சிங்கம்பட்டியில் கருமந்தி குரங்குகள் தொல்லை: பொதுமக்கள் அவதி
X

அயன் சிங்கம்பட்டி கிராமத்தில் கருமந்தி குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகிலுள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்தில் கருமந்தி குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி.

மணிமுத்தாறு அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்தில் கருமந்தி குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகிலுள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கருமந்தி குரங்குகள் வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயரை அத்துவிடுவது மட்டுமல்லாமல், வீட்டின் மேற்கூரையில் மேல் ஏறி ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளை உடைத்து சேதப்படுத்துகிறது. மேலும் சிறு குழந்தைகளை விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. எனவே ஊருக்குள் கூட்டம், கூட்டமாக உலாவரும் கருமந்தி குரங்கு கூட்டங்களை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business