/* */

வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு அறைபூட்டி சீல் வைக்கப்பட்டது

HIGHLIGHTS

நெல்லையில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு. நாளை மறுதினம் நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 70.36% சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதாவது ஒரு லட்சத்து 3330 வாக்காளர்கள் நேற்று நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. வாக்குச் சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் இரவோடு இரவாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் வரப்பட்டது. ஒருசில வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பெட்டி வருவதில் தாமதம் ஏற்பட்டது. ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தலா ஒரு மையம் என நெல்லையில் ஐந்து வாக்கு எண்ணும் மையங்கள் முதல்கட்ட தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் வி.கே.புரம் அமலி மேல்நிலை பள்ளிக்கும், சேரன்மகாதேவி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அங்குள்ள பெரியார் மேல்நிலைப் பள்ளிக்கும், மானூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரிக்கும், பாளையங்கோட்டை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கொங்கந்தன்பாறை ரோஸ் மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஸ்ட்ராங் ரூமில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் அதிகாரிகள் முனையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் ஸ்ட்ராங் ரூம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும் ஒரு டிஎஸ்பி தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 55 காவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் மையத்தை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

தொடர்ந்து நாளை மறுதினம் நெல்லையில் களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது. பின்னர் ஒட்டு மொத்தமாக வரும் 12ஆம் தேதி 9 ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகளும் ஒரே நாளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும் நாளை மறுதினம் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

Updated On: 8 Oct 2021 10:54 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  7. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  10. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு