அவன் இவன் பட விவகாரம்- நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜர்

அவன் இவன் பட விவகாரம்- நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜர்
X

அவன் இவன் பட விவகாரத்தில் நடிகர் ஆர்யா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு ஆர்யா,விஷால் நடிப்பில் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் சொரிமுத்து அய்யனார் கோவிலை தவறாக சித்தரிப்பதாக கூறி பாலா மற்றும் ஆர்யா மீது வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணை கடந்த பிப்ரவரி 20 இல் நடந்த போது நடிகர் ஆர்யா நேரில் ஆஜராக வரவில்லை என்பதால் நீதிபதி, நடிகர் ஆர்யாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை ஆர்யா ஆஜராகிய நிலையில் மாலை வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மாலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரும் நடிகர் ஆர்யா ஆகிய இருவரும் சமாதானமாக செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாக நீதிபதி தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!