கோதையாறு அருகே அரிசி கொம்பன் யானை நடமாட்டம்

கோதையாறு அருகே அரிசி கொம்பன் யானை நடமாட்டம்
X

 கோதையாறு அணை அருகே நிற்கும் வீடியோ வைரல் ஆகியுள்ளது

கோதையாறு அருகே அரிசிக்கொம்பன் யானை உள்பட யானைக்கு பாதுகாப்பிற்கு வாகனங்கள் சென்றன

கோதையாறு அருகே அரிசிக்கொம்பன் யானை உள்பட யானைக்கு பாதுகாப்பிற்கு சென்ற வாகனங்கள் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியை கடந்தன .

தேனி மாவட்டத்தில் பிடிபட்ட அரிசிக் கொம்பன் யானை நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு வனப்பகுதி வழியாக சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்துக்குழி எனும் பகுதியில் விடுவதற்காக நேற்றிரவு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

தொடர்ந்து முத்துக்குழி என்ற பகுதிக்கு யானை ஏற்ற செல்ல முடியாத காரணத்தினால் குட்டியாறு டேம் என்ற பகுதியில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அரிசிக்கொம்பனை விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து யானை சற்று மயங்கிய நிலையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த யானை அணையின் அருகே நிற்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் யானை விடப்பட்டுள்ள இடத்தில் வனத்துறை மருத்துவ குழுவினர் முகாமிட்டு யானையின் நடவடிக்கையை கண்காணித்தும், அதற்கான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அரிசிக்கொம்பன் யானையை கொண்டு சென்ற வாகனம் மற்றும் அதற்கு பாதுகாப்பிற்கு சென்ற வாகனங்கள் உள்பட சுமார் 10 -க்கும் மேற்பட்ட வனத்துறை வாகனங்கள் யானையை இறக்கிவிட்டு மாஞ்சோலை வழியாக தற்போது மணிமுத்தாறு வனச்சோதனை சாவடி நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன..

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare