அமமுகவிற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு- வேட்பாளர் பெருமிதம்

அமமுகவிற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு- வேட்பாளர் பெருமிதம்
X

வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் அமமுகவிற்கு அமோக வரவேற்பு உள்ளது என அமமுக வேட்பாளர் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அம்பாசமுத்திரம் தொகுதியில் அமமுக வேட்பாளர் ராணி ரஞ்சிதம் தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது .மேலும் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல் பரப்புரை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

அமமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுடன் களப்பணிக்கான கலந்தாய்வு மேற்கொள்ள ஏதுவாகவும்,மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கவும் ஏற்றதாக காரியாலயம் அமையும்.மேலும் வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு உள்ளது என்றார் .இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து அம்பாசமுத்திரம் பகுதியில் தனது பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!