அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர்  வாக்கு சேகரிப்பு
X
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா ஏழாவது நாளாக இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதனடிப்படையில் ஏழாவது நாளான இன்று புதுக்குடி, காரு குறிச்சி கூனியூர் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வேனில் நின்று கொண்டு வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் கடந்த பத்தாண்டுகளில் அதிமுக செய்த சாதனைகளை எடுத்து கூறி இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கூறினார்.

அப்போது வேட்பாளர் இசக்கிசுப்பையாவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளருடன் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் மாரித்துரை வட்டாரத் தலைவர் பாத்து ஸங்கம் மற்றும் துரைராக் ரெங்கன் ஆகியோர் உட்பட பலர் சென்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!