வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் செயல்முறை விளக்க கூட்டம்
சேரன்மகாதேவி வேளாண் வட்டாரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் ஊரக பங்கேற்பு பங்கீடு விளக்கம் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பேரூராட்சியில், பொதுமக்களுக்கு ஊரக பங்கேற்பு பங்கீடு வேளாண் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு ஊரக வேளாண் அனுபவத் திட்டதின் கீழ் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் அபிஜித்நாயர், அஜித்குமார், ஆனந்த்பாபு, அரவிந்த், இளங்கோவன், ஹரிசெல்வபிரசாத், முகமதுஅஸ்லாம், பிரசாந்த், ராஜேஷ், சிவஜெயஆகாஷ், விஸ்வநாத் ஆகியோர் ஊரக பங்கேற்பு பங்கீடை வரைபடங்கள் மூலம் செய்து விளக்கினர்.
இவற்றில், அவர்கள் கிராமத்தில் அமைந்துள்ள வளங்கள் மற்றும் வசதிகள் குறித்தும், அவர்களது கிராமத்தின் வரலாற்று நிகழ்வுகளை குறித்தும் வரைபடம் மூலம் எளிதாக மக்களுக்கு புரியும் வண்ணம் கூறினார்கள். அக்கிராமத்தில் நடும்பயிர்களை பற்றியும் அவற்றின் பருவகால அட்டவணை குறித்தும் செயல் விளக்கம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu