சேரன்மகாதேவியில் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடிய அதிமுகவினர்

சேரன்மகாதேவியில் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடிய அதிமுகவினர்
X

சேரன்மகாதேவியில்,  நகர அதிமுகவினர் 50-வது ஆண்டு பொன்விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை ஒட்டி, சேரன்மகாதேவியில், எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் அதிமுக 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக நகர மூத்த நிர்வாகிளான மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் இசக்கிபாண்டியன், முன்னாள் நகர செயலாளர் இசக்கிமுத்து ஆகியோருக்கு, நகர அதிமுக சார்பில் பொன்னாடை மற்றும் சந்தன மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து பட்டாசு வெடித்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

விழாவிற்கு, சேரன்மகாதேவி நகர செயலாளர் வக்கீல் பழனிக்குமார் தலைமை வகித்தார். இதில் முன்னாள் நகர செயலாளர் ஐசக் பாண்டியன், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், சேரை மாரிச்செல்வம், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு மகாராஜன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செல்வகுமார் மற்றும் மூத்த நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!