ரஜினிகாந்தின் எதிர்ப்பால் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா புதிய முடிவு

தனுஷ் - ஐஸ்வர்யா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா. இவர்களுடைய மூத்த மகள் சவுந்தர்யா. இரண்டாவது மகள் ஐஸ்வர்யா. இரண்டு மகள்களுக்கும் ரஜினிகாந்த் சிறந்த முறையில் திருணம் நடத்தி வைத்தார். ஆனால் அவர்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வில்லை. இதனால் ரஜினிகாந்த் மிகவும் வருத்தம் அடைந்தார். இது பற்றி தனது நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார். முதல் கணவரை விவாகரத்து செய்த சவுந்தர்யா சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த இரண்டாவது திருமணத்தையும் ரஜினிகாந்த் நண்பர்கள் முக்கிய பிரமுகர்களை அழைத்து பிரமாண்டமாக நடத்தினார்.
இரண்டாவது மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுசை காதலிப்பது பற்றி அறிந்த ரஜினிகாந்த் அவர்கள் திருமணத்தையும் சிறப்பாக நடத்தினார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுசை, கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். நடிகர் தனுஷ் இந்திய அளவில் முன்னணி நடிகராக முன்னேறி வந்து கொண்டிருக்கிறார், வெளிநாட்டு படங்களிலும் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா தமிழ் படம் இயக்கி உள்ளார். தொடர்ந்து படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகளால் மோதல் ஏற்பட்டது.
ஒருவரை பற்றி ஒருவர் குறை கூறிவந்தார்கள். சில மாதங்கள் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தது.இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக திடீரென்று அறிவித்தனர். இந்த பிரிவு திரையுலகத்தில் மட்டும் அல்ல ரஜினிகாந்த், தனுஷ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து மனு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை ரஜினிகாந்த் கடுமையாக எதிர்த்தார். தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் இரண்டு மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமான முறையில் முடிவு உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடும்பத்தினர் நலன் கருதியும் மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவதும் விவாகரத்து செய்யும் முடிவை கைவிட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது.இதுபற்றிய மகிழ்ச்சியான அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் குடும்ப நண்பர்கள் தெரிவித்தனர். கடந்த பத்து மாதங்களாக தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பேசப்பட்டு வந்தது ஒரு முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu