அம்பாசமுத்திரத்தில் மினி பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு
மினி பேருந்து மோதி உயிரிழந்த இளம் பெண் ரம்யா.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் டாஸ்மாக் மது பான கடை உள்ளதால் எப்பொழுதும் மதுப் பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தற்போது அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள பாலம் வேலை நடைபெற்று வருவதால் கடந்த இரண்டு வாரங்களாக போக்குவரத்து முற்றிலும் மாற்றி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே மினி பஸ் மோதி இளம் பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாசமுத்திரம் அடையகருங்குளம் பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருபவர் குமார். இவரின் மகள் சலோ ரம்யா. இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்தார்.
ரம்யா தனது தந்தைக்காக சாப்பாடு கொடுத்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிபோது, சாலையில் சென்ற மினி பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு, ரம்யா உயிரிழந்துள்ளார். இந்த நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மேலும் இந்த பகுதியில் ஸ்பீடு பிரேக்கர் மற்றும் தடுப்பு டிவைடர் வைத்து பொது மக்களுக்கும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் பாதுகாப்பாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் எதிர்பார்பாக உள்ளது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் மினி பஸ் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu